ஒலியா டைஆய்க்கா Roxb. - ஒலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்:   மலையாளப் பெயர்: ஏடனா, எட்லா, இரிப்பா, கரிவெட்டி, பாலாரானா, வலிய வெட்டிலா, வாயலா, விடனா.கன்னடப் பெயர்: தொடலெ, கல்லுதொடாலி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது; உள்பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.6-1.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 7.5-17.5 X 2.3-7.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சீராக அதிக்கூரியது முதல் கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு ஆங்காங்கே ரம்ப பற்களுடையது அல்லது அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ் முதல் சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது, பொரும்பாலும் உலரும் போது சிவப்பு நிறமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் பிற நரம்புகள் கண்களுக்கு புலப்படாது அல்லது சிறிது அலகின் பரப்பைவிட பள்ளமானது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் இருமுறை கிளைத்த பேனிக்கிள்; மலர்கள் பாலிகேமோ-டையிசியஸ், கிரீம் நிறமானது-வெள்ளை நிறமானது; மலர்காம்பு 0.4 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, கனியும் போது நீல நிறமானது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகள் மற்றும் மழை அதிகம் பெறும் இலையுதிர்காடுகளிலும் காணப்படும், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

DC, Prodr. 8: 294. 1844; Gamble, Fl. Madras 2: 796.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 279. 2004; Cook, Fl. Bombay 2: 118. 1908; Almeida, Fl. Maharashtra 3:190. 2001.

Top of the Page