English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை மஞ்சள் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கோணங்களுடையது, முதிரும் போது வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் பெரியவை, இலைகளைப் போன்றது, தலைகீழ் முட்டை வடிவானது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 8.5-16 x 4-12 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் மெட்டையானது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்.. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது தண்டின் நுனியில் காணப்படும், கோள வடிவமானது சீரமஞ்சரி; மலர்கள் காம்பற்றது, பர்புள் நிறமானது. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சியூல்) கோள வடிவமான சீரமஞ்சரியில் அமைந்தவை, ஒர் கனி இரண்டு இலைப் போன்ற அமைப்பு கொண்ட உருண்ட வடிவுடையது (காக்கை); விதைகள் எண்ணற்றது, தட்டையானது, இறகுடையது. |