English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | இலையுதிர் மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை கீரிம் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் நிலத்திற்கு இணையானவை; சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் பெரியவை, தலைகீழ் முட்டை வடிவானது, தளம் படகு போன்றது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 10-20 x 4.5-10 செ.மீ., முட்டை வடிவானது, நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அரிதாக கூரியது, அலகின் தளம் சதுர வடிவானது முதல் மெட்டையானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்.. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் சீரமஞ்சரி; மலர்கள் காம்பற்றது, மஞ்சள்-பர்புள் கலந்தவை; புல்லி இதழ்கள் நீண்டவை. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சியூல்) கோள வடிவமான சீரமஞ்சரியில் அமைந்தவை, ஒர் கனி இரண்டு இலைப் போன்ற அமைப்பு கொண்ட உருண்ட வடிவுடையது (காக்கை); விதைகள் எண்ணற்றது, இறகுடையது. |