மில்லியோஸா நீலகிரிக்கா Bedd. - அனோனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சுருக்கங்களுடையது (ரூக்கோஸ்).
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.3-0.7 செ.மீ. நீளம்; இலை அலகு 5-10 X 2-4 செ.மீ., முட்டை வடிவம், ஈட்டி வடிவம் அல்லது நீள்வட்டம்-ஈட்டி வடிவம், அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் சராசரியாக 6 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தனியானது, இலைக்கோணங்களில் அமைந்தவை அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, பர்ப்பிள் கலந்த பச்சை நிறம்; மலர்காம்பு 0.5-1.0 செ.மீ. நீளம்.
கனி / விதை : கொத்தான 1-2 விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, அலகுடையது, சிவப்பு நிறம்.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரை உள்ள மழை குறைந்த பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - அகஸ்த்திய மலையில் கிழக்கு சரிவிலும், வருசநாடு மற்றும் நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Beddome, Icon. Pl. Ind. Or. 88. 1868-1874; Gamble, Fl. Madras 1: 22. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 18. 2004.

Top of the Page