மிஸ்வா பெர்ரியா L. - குளுசியேசி

இணையான பெயர் : மிஸ்வா ஸ்பிசிஒசா Choisy; மிஸ்வா பெடங்குலேட்டா Wt.; மிஸ்வா கோரமெண்டலினா Wt.

தமிழ் பெயர் : மலைநங்கை, நாகாகுரம், நாகப்பூ, நாங்கு, நான்ஜில், நாங்குல், சுருளி.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரங்கள், தாங்கு வேர்களுடையது (பட்ரஸ்டு), 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், ஒழுங்கற்ற பெரிய செதில்களாக பெயரும் தன்மையுடையவை; உள்பட்டை சிவப்பு நிறமானது.
சாறு : சாறு அழுக்கடைந்த வெள்ளை நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு மெல்லியது, 0.5-1.2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இலை அலகு 7.5-14 X 1.5-3.5 செ.மீ., குறுகிய நீள்வட்டம் வடிவம் முதல் குறுகிய ஈட்டி வடிவமானது, அலகின் நுனி குறுகிய அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); இரண்டாம் நிலை நரம்புகள் அதிகமானவை, மெல்லியது, நெருக்கமானவை, இணையானவை, மையநரம்பிற்கு கிடைமட்டமானவை, சிலசமயங்களில் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இருபாலானவை, தனித்தவை அல்லது ஜோடியாக இலைக்கோணங்களில் காணப்படுகின்றன; அல்லி இதழ்கள் வெள்ளை நிறமானவை; மகரந்ததாள் அதிகமானவை, ஆரஞ்சு மஞ்சள் நிறமானவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவானது முதல் கோளவடிவானது, நுனியில் அலகு போன்ற நீட்சியுடையது, கோடுகளுடையது, 1-4 விதைகளையுடையது.

வாழியல்வு :

பரவலாக காணப்படுபவை, மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, பொதுவாக ஒடைகளுக்கு அருகாமையில் காணப்படுகின்றன, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

மிஸ்வா பெர்ரியா எனப்படும் இந்த சிற்றினம் பல்வேறு வெரைட்டிகளாகவோ அல்லது மிகச்சிறிய சிற்றினங்களாக அல்லது சிற்றினங்களகோவோ உயர்த்தபட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தையும் இங்கு ஒருங்கே இணைத்து தரப்பட்டுள்ளது.

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. Ind. 1: 277. 1874; Gamble, Fl. Madras 1: 77. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 42. 2004; Saldanha, Fl. Karnataka 1: 210. 1996; Cook, Fl. Bombay 1: 81. 1902.

Top of the Page