English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | குத்துச்செடி அல்லது சிறிய மரம். |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் ஆங்கில எழுத்து Z வடிவில் கிளைத்தவை; சிறிய நுனிக்கிளைகள் நான்கு கோணங்களுடையவை, மெல்லியது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.2-0.4 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 3.5-6.7 X 1-2.2 செ.மீ., முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால் போன்றது, சிலசமயங்களில் குறுகிய அதிக்கூரியதுடன் மழுங்கிய நுனியுடையது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு சிறிதளவு அலகின் பரப்பைவிட பள்ளமானது மற்றும் இண்ட்ராமார்ஜினல் (விளிம்பு நரம்பு) நரம்புடையது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்குப் புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் மூன்று மலர்களுடைய சைம், இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்காம்பு மெல்லிய நூலைப்போன்றது; அல்லி இதழ்கள் வெளிறிய நீல நிறமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது; விதை ஒன்றுடையது. |