English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன், வழுவழுப்பானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, அடர்த்தியாக உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிலசமயங்களில் சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 1.8-3.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது, காம்பின் தளப்பகுதி உப்பியது; இலை_அலகு 7-21 X 2-8 செ.மீ., குறுகிய நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது முதல் நீள்வட்டம்-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சிலசமயங்களில் ஆங்காங்கே பற்களுடையது; கோரியேசியஸ், உலரும் போது ப்ரவுன் நிறமானது, அலகின் மேற்பரப்பில் மையநரம்பு மற்றும் நரம்பு பகுதிகள் உரோமங்களுடையது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-18 ஜோடிகள், அலகின் மேற்புறத்தில் சிறிது பள்ளமானது, உரோமங்களுடைய டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி பேனிக்கிள் வகை மஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும், அடர்த்தியாக உரோமங்களுடையது; மலர்கள் காம்பற்றது; பூவடிச்செதில் உடையது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோள வடிவமானது; ஒர் விதையுடையது, சுருக்கங்களுடையவை (ருக்கோஸ்). |