மாஞ்சிபெரா இண்டிகா L. - அனகார்டியேசி

:

தமிழ் பெயர் : மாமரம், மாங்கா, மா.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற வளையமானது; மரத்தின் பட்டை செதில்களுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது.
சாறு : தண்ணீர் போன்றது மற்றும் கொப்பளங்களை உருவாக்கவல்லது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 1.2-6.2 செ.மீ. நீளமுடையது, இலைக்காம்பின் தளப்பகுதி தடித்திருக்கும், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இலை அலகு 8-25 X 1.7-6 செ.மீ., குறுகிய நீள்சதுரம்-நீள்வட்டம் அல்லது ஈட்டி வடிவம், அலகின் நுனி சீராக அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் படிப்படியாக குறுகியது, அலகின் விளிம்பு சிறிது அலைப்போன்றது, சிறிது தடித்த இலைகள், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் அதிகமானது, நேரானது அல்லது படிப்படியாக வளைந்தது, 28-30 ஜோடிகளுடையது, மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், மலர்கள் ஒர்பாலானவை மற்றும் இருபாலானவை கலந்தவை (பாலிகேமஸ்), பச்சை கலந்த வெள்ளை நிறம்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சதைப்பற்றானது, ஒரு விதை கொண்டது, தட்டையானது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளில் மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரங்களாக காணப்படும்.

காணப்படும் இடம் :

காட்டு மாஇனங்கள் இந்தோமலேசியன் பகுதியில் காணப்படுகிறது மற்றும் பல்வேறு ரகங்கள் பொதுவாக வெப்பமண்டல பகுதியில் வளர்க்கப்படுகிறது.

சான்று ஏடு :

Sp. Pl. 1: 200. 1753; Gamble, Fl. Madras 1: 268-269. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 205. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 112. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 126. 1990; Cook, Fl. Bombay 1: 281. 1902.

Top of the Page