மாமீயா சூரிகா (Buch.-Ham. ex Roxb.) Kosterm. - குளுசியேசி

இணையான பெயர் : கேலோபில்லம் சூரிகா Buch.-Ham. ex Roxb.; ஆக்ராகார்பஸ் லான்ஜீஃபோலியஸ் (Wt.) Anders.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, ஒழுங்கான செதில்களாக பெயரும் தன்மையுடையது; மரத்தின் உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு பொதுவாக 4-6 நெருக்கமான செதில்களால் மூடப்பட்டிருக்கும்.
சாறு : சாறு மஞ்சள் கலந்த கிரீம் நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.5-1.0 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 10-23 X 4-7.5 செ.மீ., நீள்சதுர வடிவமானது, குறுகிய நீள்சதுரம் முதல் குறுகிய தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது அல்லது சிறிய மொட்டையான அதிக்கூரியது, அலகின் தளம் மழுங்கியது, தடித்த கோரியேசியஸ்; மையநரம்பு அலகின் நுனியில் தெளிவற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் அதிகமானது, ஒன்றுக்கொன்று இணையானவை, மையநரம்பிற்கு கிடைமட்டமானவை; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னலுடையது அதன் நடுவில் ஒளிபுகும் சுரப்பியுடையது, சிலசமயங்களில் இச்சுரப்பிகள் கண்களுக்கு புலப்படுவதில்லை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை மற்றும் இருபாலானவை கலந்தவை (பாலிகேமஸ்), வெள்ளை நிறமானவை, தொகுப்பாக முதிர்ந்த இலைகளற்ற கிளைகளில் காணப்படுகின்றன, நீண்ட காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, நுனியில் அலகு போன்ற நீட்சியுடையது; 1-விதையுடையது.

வாழியல்வு :

திரிந்த பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - வடக்கு மலபார் கடற்கரை பகுதியிலிருந்து தெற்கு கொங்கன் கடற்கரை பகுதி வரை மற்றும் மத்திய சயாத்திரின் வடக்கு பகுதியில் மட்டும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Comm. For. Res. Inst. Indones. Bogor 72: 33. 1961; Gamble, Fl. Madras 1: 75. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 42. 2004; Saldanha, Fl. Karnataka 1: 209. 1996; Cook, Fl. Bombay 1: 79. 1902.

Top of the Page