லிட்சியா கியன்கிஃபுளோரா (Dennst.) Suresh - லாரேசி

இணையான பெயர் : லிட்சியா லிக்குஸ்ட்ரினா (Nees) J.Hk.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறு உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7-10 X 2.5-4 செ.மீ., தலைகீழ் முட்டை முதல் தலைகீழ் ஈட்டி வடிவம் அல்லது நீள்வட்ட வடிவானது, சப்கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), இரண்டாம் நிலை நரம்புகள் 6-9 ஜோடிகள், மற்ற சிறு நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் அல்லது தண்டின் பக்கவாட்டிலுள்ள அம்பல் வகை மஞ்சரி.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 0.6 செ.மீ. குறுக்களவுடையது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

பொதுவாக குறைவாக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 700-2200 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - அரிதாக தெற்கு சயாத்திரி, பாலக்காடு மற்றும் வயநாடு பகுதிகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Nicols. et al., Interpr. Hort. Malab. 158. 1998; Gamble, Fl. Madras 2: 1235. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 399. 2004.

Top of the Page