English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது, வழுவழுப்பானது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறு உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4-1.5 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7-18 X 2-5.5 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவானது முதல் குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), சிறு உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி அம்பல் வகை, இலைக்கோணங்கள் அல்லது பக்கவாட்டில் அமைந்தவை, காம்பற்றவை அல்லது மஞ்சரி காம்புடையது; மலர்கள் ஒர்பாலானவை. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1.5 செ.மீ. நீளமானது, ப்பீரியான்ந்த் கோப்பை மேல் அமர்ந்தவாறு காணப்படும். விதை ஒன்றுடையது. |