லிட்சியா ஃபுளோரிபண்டா (Bl.) Gamble - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, லெண்டிசெல் கொண்டது; உள்பட்டை ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, அடர்த்தியாக துரு போன்ற உரோமங்களுடையவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.4-2 செ.மீ., நீளமானது, அடர்த்தியாக துரு போன்ற உரோமங்களுடையவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 6-25 X 3-9 செ.மீ., அலகின் வடிவம் மாறுபாடுகள் நிறைந்தது, நீள்வட்டம் முதல் நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியவை முதல் கூரியது அல்லது அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), உலரும் போது அலகின் மேற்பரப்பு பச்சை நிறத்தில் காணப்படுபவை, கீழ்பரப்பு ப்ரவுன் நிறமடைகிறது, கீழ்பரப்பில் ஆங்காங்கே உரோமங்களுடையது, மேற்பரப்பு உரோமங்களற்றது ஆனால் மையநரம்பு தளத்தில் மட்டுமே உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-15 ஜோடிகள், மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது, கீழ்பரப்பில் தடித்தவை, பொதுவாக சீராக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட், தெளிவானவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி அம்பல் வகை ரெசீம் போன்று அமைந்தவை, துரு போன்ற உரோமங்களுடையவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவானது, கோப்பை போன்ற ப்பீரியான்ந்தின் மேல் அமர்ந்தவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அதிகமாக, கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 300-1800 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில்) காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Gamble, Fl. Madras 2: 1238. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 398. 2004; Saldanha, Fl. Karnataka 1: 66. 1996.

Top of the Page