English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, இளம்பருவத்தில் சிறிது உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் கூட்டிலை, இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, 60 செ.மீ. நீளமானது; மத்தியகாம்பு (ராக்கிஸ்) பல்வினேட், கோடுகளுடையது, இளம்பருவத்தில் உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.5-1 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; சிற்றிலைகள் 4-6 ஜோடிகள், எதிரடுக்கமானவை - கிட்டதட்ட எதிரடுக்கமானவை அல்லது மாற்றுஅடுக்கமானவை, 12-21 X 3.5-6 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகள், சீராக வளைந்தவை மற்றும் நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள் வகை; மலர்கள் பாலிகேமொடையீசியஸ், வெள்ளை நிறமானது, காம்பற்றது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) 1-3, தளத்தில் இணைந்தவை, நீள்வட்ட வடிவானது, 3.5 X 2 செ.மீ.; விதைகள் நீள்வட்ட வடிவானது, கருப்பு நிறமானது. |