English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன், சொரசொரப்பானது; உள்பட்டை ப்ரவுன். |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் நிலத்திற்கு இணையானவை; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது முதல் தட்டையானது, இளம்பருவத்தில் நுண்ணிய உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் சிறியவை, முக்கோணமானது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, நிரந்தரமானது; இலைக்காம்பு 0.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 6 X 2.5 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி சிறிய அதிக்கூரியதுடன் அதன் முனை மூயூக்கரனேட், அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும் அல்லது அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 3-4 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய இணையான நெருக்கமான பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி சைம் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் அல்லது இலைகளற்ற கிளைகளில் காணப்படுபவை; மலர்கள் காம்பற்றது, வெள்ளை நிறமானது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோள வடிவமானது, கனியின் நுனியில் நிரந்தரமான புல்லி இதழ்கள் உடையது, கனியும் போது கரும்பர்புள் நிறமானது; விதைகள் 4. |