English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
வளரியல்பு : | பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன், வழுவழுப்பானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் நிலத்திற்கு இணையானவை; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது முதல் தட்டையானது, உரோமங்களுடையது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் முக்கோணமானது, இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.2-0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 5.5-17 X 2-4 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் நீள்சதுர வடிவானது அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால் போன்றது வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் உரோமங்களுடையது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய இணையான நெருக்கமான பெர்க்கரண்ட். |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி சைம் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்கள் காம்பற்றது, வெள்ளை நிறமானது. |
கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோள வடிவமானது, கனியின் நுனியில் நிரந்தரமான புல்லி இதழ்கள் உடையது; விதைகள் 4. |