ஹண்டீரியா சிலானிக்கா (Retz.) Gard. ex Thw. - அப்போசினேசி

இணையான பெயர் : ஹண்டீரியா கோரியம்போசா Roxb.; ஹண்டீரியா ராக்ஸ்பெர்க்கீயானா Wt.; கேமர்ரியா சிலானிக்கா Retz.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறுமரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : நுனிக்கிளைகள் மெல்லியது மற்றும் உரோமங்களற்றது.
சாறு : வெள்ளை நிறமான பால் போன்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1.3-1.9 செ.மீ. நீளமானது; குறுகிய நீள்வட்டம்-நீள்சதுர வடிவம் முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் முதல் மழுங்கியவை, கூரிய தளமுடையது, அலகின் விளிம்பு முழுமையானது, பளபளப்பான மேற்பகுதியுடையது, கீழ்பரப்பு உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ், மையநரம்பு அலகின் பரப்பைவிட மேலெழும்பியது, விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் அதிகமானது, மற்றும் மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் மத்திய நரம்பை நோக்கியவாறு கிளைகளுடையது (அட்மீடியல்லி ராமிபைடு).
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தண்டின் நுனியில் அல்லது இலைக்கு எதிரான சைம், வெள்ளை நிறமானது, நறுமணமுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது கனியும் போது ஆரஞ்சு சிவப்பு நிறமடைகிறது, 1 அல்லது 2 விதைகளையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சாயாத்திரியில் மட்டும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Thwaites, Pl. Zeyl. 191. 1860; Gamble, Fl. Madras 2: 808. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 282. 2004.

Top of the Page