English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை அடர்ந்த அரக்கு நிறம், வெடிப்புகளுடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறுநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு கொண்டது; இலைக்காம்பு தோராயமாக 1.2 செ.மீ. நீளமானது; இலை அலகு 12.5-18 X 3-5 செ.மீ. ஈட்டி வடிவமுடையது, அலகின் நுனி சிறிது சிறிதாக குறுகி வால் போன்று நீண்டு மழுங்கிய முனை, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கிடைமட்டமான பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மஞ்சள் கலந்த வெள்ளை நிறம். |
| கனி / விதை : | உலர்கனி (நட்), தோராயமாக குறுக்குவெட்டில் 1.2 செ.மீ., உருண்டையானது, ஏபிகுலேட், கனி நிரந்தரமான புல்லி இதழ்களால் சூழப்பட்டது; ஒரு விதை கொண்டது. |