ஹோமாலியா ட்ராவன்கோரிக்கா Bedd. - ஃப்ளக்கோர்சியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம்; இலைக்காம்பு 0.8– 1.2 செ.மீ. நீளமானது, பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 4.5-10 X 2.3-5 செ.மீ., முட்டை வடிவமுடையது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அலகின்விளிம்பு பிறை வடிவ ரம்ப பற்களுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 6 - 8 ஜோடிகள், நுனி நோக்கியவாறு வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் - பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் சிறியவை, கெத்தாக இலைக்கோணங்களில் அமைந்த ஸ்பைக் வகை மஞ்சரி, பச்சை - வெள்ளை நிறமானவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சியுல்), விதைகள் எண்ணற்றவை.

வாழியல்வு :

அரிதானது, அண்டர்ஸ்டோரி மரமாக 1200 மீ. வரை உள்ள உயரமான மலைகளில் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது- தெற்கு சாகயத்திரி மற்றும் பாலக்காடு (தமிழ்நாடு) பகுதியில் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Fl. Sylv. 211. 1872; Gamble, Fl. Madras 1: 523.1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 32. 2004.

Top of the Page