க்ளைகாஸ்மிஸ் மோக்ரோகார்ப்பா Wt. - ரூட்டேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம், 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துருப்போன்ற உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பல்வினேட், துருப்போன்ற உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.3-0.6 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், சிறிது உரோமங்களுடையது; சிற்றிலைகள் 3-7, மாற்றுஅடுக்கமானவை, 7-14 X 2.5-4.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி வால் போன்றது அல்லது சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது அல்லது சிறிது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, இளம்பருவத்தில் துருப்போன்ற உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை முதல் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, பேனிக்கிள் வகை மஞ்சரி, உரோமங்களுடையது; மலர்கள் சிறியவை, காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது, நீட்சியுடையது, 2 செ.மீ. குறுக்களவுடையது, வெள்ளை நிறமானது பிறகு பிங்க் நிறமானது; விதைகள் 2-3.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 200-1100 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு சயாத்திரி மற்றும் மத்திய சயாத்திரி (வயநாடு மற்றும் கூர்க் ) பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

அரிதானது (நாயர், 1997).

சான்று ஏடு :

Wight, Illustr. 1: 109. 1840; Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 81. 2004.

Top of the Page