கார்சீனியா ரூப்ரா-எக்கினேட்டா Kosterm. - குளுசியேசி

இணையான பெயர் : கார்சீனியா எக்கினோகார்பா sensu J.Hk. non Thw.; கார்சீனிய எக்கினோகார்ப்பா ரகம். மொன்டிகோலா Mahes.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, லெண்டிசெல் உடையது; உள்ப்பட்டை ஆரஞ்சு-சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, உரோமங்களற்றது, உலரும் போது மஞ்சள் நிறமானவை.
சாறு : சாறு கிரீம் நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு தடித்தது, தளத்தில் உறை போன்றது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், 1-2.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7-15 X 3-7 செ.மீ., அகன்ற தலைகீழ் முட்டை வடிவம், சிலசமயங்களில் நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி வட்டமானது, சிலசமயங்களில் சிறு பிளவுடையது (ரெட்யுஸ்), அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், தடித்த கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் அதிகமானது, நெருக்கமானவை, இணையானவை, தடித்த விளிம்பு வரை செல்பவை; உலரும் போது சாற்றை சுரக்கும் குழாய்கள் தெளிவாக காணப்படுபவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் தொகுப்பாக காணப்படுபவை; பெண்மலர்கள் தண்டின் நுனியில், தனித்தவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவைப்போன்றது, 6.5 X 5 செ.மீ., முட்கள் (எக்கினேட்) கொண்டது; 1-3 விதைகளையுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை, சிலசமயங்களில் 1800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - பரவலாக அகஸ்த்திய மலை மற்றும் அரிதாக பெரியார் மலைப்பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Sri Lanka J. Sci. (Biol. Sci.) 12 (2): 128. 1977; Gamble, Fl. Madras 1: 73. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 42. 2004.

Top of the Page