பைக்கஸ் டால்பாட்டை King - மோரேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: இத்தி, கல்-இத்திமலையாளப் பெயர்: வெள்ளஆல், இத்தி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பசுமைமாறாமரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது, தொங்கு வேர்களுடையவை, இளம்பருவத்தில் பொரும்பாலும் ஒட்டு செடியாக ஆரம்பிக்கின்றன.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பச்சை நிறம், வழவழப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
சாறு : வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 0.5 செ.மீ. நீளமானது, முட்டை வடிவானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 5- 12.7 X 1.2-6.4 செ.மீ., முட்டை வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது முதல் வால் போன்றது அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு-கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், காம்பற்றது, ஒர் ஜோடியாக இலைக்கோணங்களில் காணப்படுபவை, அழுத்தப்பட்ட கோள வடிவமானது; மலர்கள் ஓர் பாலானவை.
கனி / விதை : சைகோனியம் கோளவடிவானது, 0.5-0.6 செ.மீ. குறுக்களவுடையது.

வாழியல்வு :

ஆங்காங்கே பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா, சைனா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் மகாராஷ்ட்ரா சாகாயத்திரி.

சான்று ஏடு :

Ann. Roy. Bot. Gard. (Calutta) 1: 51. tt. 63 & 84. 1887; Gamble, Fl. Madras 3: 1363.1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 441. 2004; Saldanha, Fl. Karnataka 1: 119. 1984; Cook, Fl. Bombay 2: 647. 1902; Almeida, Fl. Maharashtra 4b:376. 2003.

Top of the Page