பைக்கஸ் எக்ஸ்ஆஸ்பரெட்டா Vahl. - மோரேசி

இணையான பெயர் : பைக்கஸ் ஆஸ்பொரிம்மா Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: இரும்பராத்தம், மரம்தின்னி அத்திமலையாளப் பெயர்: பாராக்கம், தொராக்கம்கன்னடப் பெயர்: கார்கட்டி ஆலாடா மர

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், 18 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய, பச்சை நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, தடித்த வெள்ளை நிறமான சொரசொரப்பான உரோமங்களுடையது.
சாறு : தண்ணீர் போன்ற சாறு வெட்டுபட்ட பட்டையிலிருந்து அதிகளவு சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் ஒர் ஜோடி, பக்கவாட்டில் காணப்படுபவை, எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 1-6 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், தடித்தவை வெள்ளை நிறமான சொரசொரப்பான உரோமங்களுடையது; இலை அலகு 5.5-17 x 3-7.5 செ.மீ., அகன்ற நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது-ஆப்பு வடிவானது; அலகின் விளிம்பு பற்களுடையது அல்லது பிளவுகளுடையது முதல் பிறை போன்ற பற்களுடையது (அரிதாக பிளவுகளுடையது), அலகின் மேற்பரப்பு மற்றும் கீழ்பரப்பு சொரசொரப்பானது, கோரியேசியஸ்; 3-_நரம்புகளை_தளத்திலே உடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 3-6 ஜோடிகள், தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், இலைக்கோணங்களில் காணப்படுபவை, தனித்தவை, சொரசொரப்பானது; மலர்கள் ஓர் பாலானவை; மஞ்சரிக்காம்பு 1.5 செ.மீ.
கனி / விதை : சைகோனியம், தலைகீழ் முட்டை வடிவம், 1.5 செ.மீ. நீளமானது, கனியும் போது மஞ்சள் நிறமானவை அல்லது பர்புள்; சிற்றுலர்கனி (அக்கீன்) நீள்சதுர வடிவானது.

வாழியல்வு :

மரங்கள் திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஆரோபியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Vahl, Enum. Pl. 2: 197. 1805; Gamble, Fl. Madras 3: 1366.1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 439. 2004; Saldanha, Fl. Karnataka 1: 116.1984; Cook, Fl. Bombay 2: 653. 1902; Almeida, Fl. Maharashtra 4b: 361. 2003.

Top of the Page