பைக்கஸ் பொட்டொமை King - மோரேசி

Vernacular names : மலையாளப் பெயர்: சொல்லா, தாவிட்டால்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய மரம், பொரும்பாலும் ஒட்டு செடியாக ஆரம்பிக்கின்றன முதிரும் போது இவை வளர்ந்த மரத்தை கொன்று தனித்த மரமாகின்றன, 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது முதல் மஞ்சள் நிறமானவை, வழவழப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, இலையடிச்செதில் உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
சாறு : வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 3.5 செ.மீ. நீளமானது, ஈட்டி வடிவானது, உரோமங்களற்றது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு தடித்தவை, 2.5-4 (-10) செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 10-25 X 5-15 செ.மீ., முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் சதுர வடிவானது, அலகின் விளிம்பு சிறிது அலை போன்றது, தடித்த கோரியேசியஸ், உரோமங்களற்றது, உலரும் போது ப்ரவுன் நிறமானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-15 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைகோனியம், இலைக்கோணங்களில் காணப்படுபவை, ஒர் ஜோடிகளாகமைந்தவை, முட்டை வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவம், உரோமங்களற்றது; மஞ்சரிக்காம்பு 1.5-2 செ.மீ. நீளமானது; மலர்கள் ஓர் பாலானவை, சைகோனியத்தின் உட்புறச்சுவற்றில் அமைந்தவை.
கனி / விதை : சைகோனியம், ஒரகம் கொண்டவை, 2.5 செ.மீ. குறுக்களவுடையது, பச்சை நிறம், கனியும் போது மஞ்சள் நிற புள்ளிகளுடையது, மஞ்சரிக்காம்பு தடித்தவை; சிற்றுலர்கனி (அக்கீன்), தலைகீழ் முட்டை வடிவம், வழவழப்பானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 200 மற்றும் 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- தெற்கு மற்றும் மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Ann. Roy. Bot. Gard. (Calcutta) 1: 26. tt. 24 & 81 M. 1887; Gamble, Fl. Madras 3: 1364.1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 438. 2004; Saldanha, Fl. Karnataka 1: 115.1984; Almeida, Fl. Maharashtra 4b:363.2003

Top of the Page