English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | சிறியமரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, ஒழுங்கற்ற பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 3-6 X 1-1.3 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் குறுகிய தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மெட்டையானது அல்லது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு மற்றும் பின்புறம் வளைந்து காணப்படும், ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள், மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல்) கண்களுக்கு புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி சைம் வகை, 2-3 மலர்களுடையது குட்டையான மஞ்சரிக்காம்பு உடையது, இலைக்கோணங்களில் காணப்படுபவை, கழலைகள் மேல் தோன்றுபவை, அரிதாக தனித்தவை; அல்லி இதழ்கள் வெள்ளை நிறமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை; ஒரு விதையுள்ள கனி. |