யுஜினியா ப்ளக்கொசா Bedd. - மிர்ட்டேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக சிறிய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 7.2-10.5 X 3.2-6 செ.மீ., அகன்ற நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி சிறிய அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது முதல் மெட்டையானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது-அட்டனுவேட், அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், இளம்பருவத்தில் இலை அலகு முழுவதும் உரோமங்களுடையது அல்லது தளத்தில் மற்றும் மையநரம்பிலோ மட்டுமாவது உரோமங்களுடையது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12 ஜோடிகள், தெளிவற்றது,; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியவை, வெள்ளை நிறமானது, தனித்தவை அல்லது குறைந்தளவு மலர்களுடையது, குட்டையானது, மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் சைம் வகை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை, அடர்த்தியாக உரோமங்களுடையது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகளில் 1300 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- அகஸ்த்தியமலையின் கிழக்கு பகுதிகளில் மற்றும் பெரியார் பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. t. 200. 1872; Gamble, Fl. Madras 1: 483.1997 (re.ed).

Top of the Page