English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை பழுப்பு கலந்த ப்ரவுன் நிறம், லெண்டிசெல்லேட்லேட்; உள்பட்டை கிரீம் நிறமுடையது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறுநுனிக்கிளைகள் வளையமானது, மற்றும் இலைகள் விழுந்ததால் ஏற்படும் வடு கொண்டது, லெண்டிசெல்லேட்லேட், பொன் நிறமான அல்லது பழுப்பு நிறமுடைய நட்சத்திர வடிவ உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 2.5 செ.மீ; இலை அலகு 7.5-10 X 5-7.5 செ.மீ., நீள்வட்டம், படகு வடிவம் கொண்டது, அலகின் நுனி கூரியது முதல் சிறிய வால் போன்று நீண்டது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், கீழ்பரப்பில் அடர்ந்த மென்மையான உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சற்று உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 9 ஜோடிகள், விளிம்பை நோக்கி நரம்புகள் கிளைத்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | ரெசீம் மஞ்சரி, 5-10 செ.மீ. நீளமானது, தோராயமாக 10 மலர்களுடையது; மலர்காம்பு 2 செ.மீ. நீளமானது, அடர்ந்த மென்உரோமங்களுடையது; அல்லி இதழ் கிரீம் நிறமுடையது, விளிம்பு பிரிந்தவை; மகரந்தபை நுனியில் நீண்ட நீட்சியுடையது (ஆன்டு). |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவமுடையது, சதைப்பற்றுள்ளது, பச்சை நிறமுடையது, 1-8 X 1 செ.மீ.; ஒரு விதை கொண்டது, கனியின் உட்புறச்சுவர் (என்டோகார்ப்) கடினமானது, கழலைகளுடையது. |