English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறம் கொண்டது, வழுவழுப்பானது, உள்பட்டை கிரீம் நிறமுடையது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மற்றும் இலைகள் உதிர்ந்ததால் உண்டாகும் தழும்பு காணப்படும். |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் ஈட்டி வடிவமுடையது, 0.3 செ.மீ. நீளமானது, உதிரக்கூடியது; இலைக்காம்பு 1.8-4.5 செ.மீ. நீளமானது, மெலிதானது, வளையமானது, இருமுனைகளிலும் உப்பியது, உரோமங்களற்றது; இலை அலகு 4.5-9 X 2-4.5 செ.மீ., முட்டை வடிவம் முதல் குறுகிய முட்டை வடிவம், அலகின் நுனி நீண்ட வால் போன்றது மற்றும் மழுங்கியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிது சதுரமானது (சப்ட்ரன்கேட்), அலகின் விளிம்பு பிறை போன்ற ரம்ப பற்களுடையது, உரோமங்களற்றது, சப்கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-7 ஜோடிகள், நரம்புகள் கிளைத்தது மற்றும் நரம்புகள் இணையும் இடத்தில் டொமேஸ்சியா காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்ட பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் அமைந்த ரெசீம், வெள்ளை நிறமான மலர்கள். |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவமுடையது, 2 செ.மீ. நீளமானது, வழுவழுப்பானது, விதை ஒன்றுடையது. |