டையோஸ்பைரஸ் ஊகார்ப்பா Thw. - எபனேசி

:

தமிழ் பெயர் : வெள்ளை கருங்காலி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கருப்பு கலந்த அரக்கு நிறமுடையது, பட்டை வெடிப்புகளுடையது; உள்பட்டை அரக்கு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, புதிய சிறு நுனிக்கிளைகளில் மென்உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-12 X 3-7.5 செ.மீ., குறுகிய முட்டை வடிவம் முதல் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது முதல் வால் போன்று நீண்டு மழுங்கியது, அலகின் தளம் கூரியது அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; காய்ந்த இலைகள் அரக்கு நிறமுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், தெளிவற்றது, தளத்திலுள்ள உள்ள நரம்புகள் நெருக்கமானவை; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள், ஈரகம் கொண்டவை (டையிசியஸ்); ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் காம்பற்று கொத்தாக காணப்படும், கிரீம் நிறமுடையது; பெண்மலர்கள் 1-3, இலைக்கோண மொட்டில் மலர்கள் தோன்றும்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்சதுரம்-முட்டை வடிவமுடையது, 2.3 X 3.5 செ.மீ. சுருங்கியவை (ரூக்கோஸ்), உதிராத நிரந்தரமான புல்லி இதழ்களுடையது, ஒவ்வொரு அறையிலும் ஒரு விதை காணப்படும்.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரம் முதல் மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரம், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமாக மத்திய மற்றும் வடக்கு மலநாடு பகுதிகளை உள்ளடக்கிய மத்திய சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Thwaites, Enum. Pl. Zeyl. 180. 1860; Gamble, Fl. Madras 2: 774. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 272. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 182. 2005. Saldanha, Fl. Karnataka 1: 339. 1996.

Top of the Page