English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் குறிப்பு சான்று ஏடு
| வளரியல்பு : | சிறிய மரம் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை அரக்கு நிறமுடையது, கழலைகள் காணப்படும், உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமுடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மற்றும் கணு இடைவெளி சிறியது; சிறுநுனிக்கிளைகளில் அடர்த்தியான மென்உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.5 செ.மீ. வரை நீளமானது, வளையமானது, இளங்காம்பு உரோமங்களுடையது; இலை அலகு 2.2-8 X 1-2.5 செ.மீ., குறுகிய நீள்வட்டம், அலகின் நுனி மழுங்கி வால் போன்று நீண்டது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு தடித்தது மற்றும் அலை போன்ற விளிம்புகளுடையது, கோரியேசியஸ், புதிய இலைகளில் உரோமங்கள் காணப்படும் மற்றும் முதிர்ந்த இலைகள் உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் தோராயமாக 7 ஜோடிகள், கிளைத்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் மூன்று மலர்களுடைய கொத்தாக இலைக்கோணங்களில் காணப்படும்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் காணப்படும், மலர் வெண்நிறமுடையது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்டம், 1 செ.மீ. வரை நீளமானது; புல்லி இதழ்கள் மூன்று கொண்டது, 1-3 விதைகளையுடையது. |