English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குறுஞ்செடி அல்லது சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் கோட்டு-ஈட்டி வடிவானது, 0.5 செ.மீ. வரை நீளமானது; இலைக்காம்பு 0.1-0.4 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது; இலை அலகு 5-11.5 X 2-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது, சிறிது துருத்திய முனையுடையது (மூயூக்கரனேட்), அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் கீழ்புறத்தில் மத்திய மற்றும் அனைத்து நரம்புகளும் ஆங்காங்கே உரோமங்களுடையது; மையநரம்பு மேல்பரப்பில் அலகின் பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-6 ஜோடிகள், நன்கு படிப்படியாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | இலைக்கோணங்களில் காணப்படும் தொகுப்பான சைம்; மலர்கள் வெள்ளை நிறம். |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1-2 பிளவுகளுடையது, உரோமங்களுடையது, 2-விதைகளையுடையது. |