குரோட்டன் லாஸிபர் L. - ஈபோர்பியேசி

:

தமிழ் பெயர் :

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது; உள்பட்டை மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலைக்காம்பு 0.8-3 செ.மீ. நீளமானது, நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; இலை அலகு 3.8-13X2-6 செ.மீ., அகன்ற முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் இதய (கார்டேட்) வடிவானது, அலகின் விளிம்பு ரம்ப பற்கள் அல்லது பிறை போன்ற பற்களுடையது, அலகின் இருபுறங்களிலும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, அலகின் தளத்தில் மூன்று நரம்புகளுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது; அலகு இலைக்காம்புடன் இணையுமிடத்தில் அலகின் பின்புறத்தில் இரண்டு ஜோடி காம்புடைய சுரப்பிகளுடையது.
மஞ்சரி / மலர்கள் : ரெசீம் மஞ்சரி, ஆண்மலர்கள் மஞ்சரியின் நுனியிலும் மற்றும் பெண்மலர்கள் ரெசீமின் தளத்திலும் காணப்படுபவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 0.8-1 செ.மீ. குறுக்களவுடையது, கோளவடிவானது, வெள்ளை நிறமான நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; விதைகள் 3 கொண்டது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மிக உயர்ந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1300-2300 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கை; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Sp. Pl. 1005. 1753 (lacciferum); Gamble, Fl. Madras 2: 1315. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 413. 2004; Saldanha, Fl. Karnataka 2: 127. 1996.

Top of the Page