காக்குலஸ் லாரிபொலியஸ் - மெனிஸ்பெர்மேசி

Vernacular names : மலையாளப் பெயர்: மார்பிங்கி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை மெல்லிய வலைப்பின்னல் பிளவுகளுடையது; உள்பட்டை வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, குறைந்தளவு உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 3.3-10.3 X 1.7-3.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது-ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; தளத்திலே 3_நரம்புகளை உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மலர்கள் ஓர் பாலானவை; ஆண் மலர்கள் மஞ்சள் நிறமானவை; பெண் மலர்கள் பச்சை-மஞ்சள் நிறமானவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தட்டையானது, 0.6 செ.மீ. குறுக்களவுடையது, உரோமங்களற்றது, இரு முனை அழந்தியவை; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறைந்த மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 1200 மற்றும் 1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் கிழக்கு ஆசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Syst. Nat. 1: 530. 1817; Gamble, Fl. Madras 1: 29.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 22. 2004; Saldanha, Fl. Karnataka 1: 97. 1984.

Top of the Page