English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை கரும்சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) கார்க் போன்றது மற்றும் நீள்வாக்கில் அமைந்தவை; உள்பட்டை கீரிம் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துருப்போன்ற உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது. |
| சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது; இலை அலகு 7-15 X 2-4 செ.மீ., குறுகிய நீள்சதுர வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி வால் - சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் சிறிது சமமற்றது மற்றும் அட்டனுவேட், அலகின் விளிம்பு அலை போன்றது, சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, முதிரும் போது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இண்ட்ராமார்ஜினல் நரம்பு (விளிம்பு நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றது, நெருக்கமான மற்றும் இணையானவை, மற்றும் இரண்டாம் நிலை நரம்புகள் கிடைப்பட்ட நரம்புகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, அடர்த்தியான தொகுப்பாகமைந்தவை; மலர்கள் வெள்ளை நிறமானது; மலர்காம்பு 0.3-0.5 செ.மீ. நீளமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது 2.5-3.5 செ.மீ. குறுக்களவுடையது, 5-6 அறைகளுடையது; விதைகள் 1, ப்ரவுன், பளபளப்பானது, 1.9 செ.மீ. நீளமானது. |