சியோநான்த்தஸ் லினொசிராய்டஸ் (Wt.) Bennet & Raizada - ஒலியேசி

இணையான பெயர் : ஒலியா லினொசிராய்டஸ் Wt.; லினொசிரா வைட்டியை Cl.

Vernacular names : மலையாளப் பெயர்: காட்டுசக்களத்தி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 6-11.6 x 3.2-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி வால் போன்றது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது, கோரியேசியஸ், உலரும் போது ஆலிவ் பச்சை நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6 ஜோடிகள், மெல்லியது, ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை முதல் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள், 4 செ.மீ. நீளமானது; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1.3 செ.மீ. நீளமானது, முட்டை வடிவானது, வழவழப்பானது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 300-700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- அகஸ்த்தியமலை மலைகள்.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Indian J. For. 4: 68. 1981; Gamble, Fl. Madras 2: 794.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 275. 2004.

Top of the Page