கேசைன் பேனிக்குலேட்டா (Wight & Arn.) Lobr.-Callen - செலஸ்ட்ரேசி

இணையான பெயர் : இலையோடென்ரான் பேணிக்குலேட்டம் Wt. & Arn.

தமிழ் பெயர் : கண்ணீர் மரம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய தாங்கு வேர் (பட்ரஸ்டு) அமைப்புடன் மரம் 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : வயதான மரங்களின் நடுத்தண்டில் ஓட்டை காணப்படும்; மரத்தின் பட்டை சாம்பல் நிறம், வழுவழுப்பானது; உள்பட்டை பிங்க் நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
சாறு : தண்ணீர் போன்ற சாறு வெட்டுபட்ட பட்டையிலிருந்து தோன்றும்
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரானது அல்லது சிறிது எதிரானது; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 7-8 X 2.5-3.5 செ.மீ., நீள்வட்டம், அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் திருகியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவமுடையது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : சைம் மஞ்சரி; மலர்கள் பச்சை கலந்த வெள்ளை நிறம், இதழ்கள் ஸ்ஃபாத்துலேட் (கரண்டி வடிவமுடையது).
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), உருண்டையானது, ஏபிகுலேட், இரண்டு விதை கொண்டது.

வாழியல்வு :

எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. முதல் 1400 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - ஆனைமலை மற்றும் பாலக்காடு மலைப்பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Adansonia ser. 2: 15. 220. 1976; Gamble, Fl. Madras 1: 212. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 95. 2004.

Top of the Page