கேசேரியா துவைட்சி Briq. - ஃப்ளக்கோர்சியேசி

இணையான பெயர் : கேசேரியா கொரியேசியா Thw.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை மஞ்சள்-ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை ; இலைக்காம்பு 0.7-1 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது, இளம்பருவத்தில் சிவப்பு நிறமானது; இலை அலகு 4.5-11.5 X 2-7.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது, சிலசமயங்களில் தலைகீழ் ஈட்டி வடிவானது அல்லது அகன்ற நீள்வட்ட வடிவானது முதல் சப்ஆர்பிக்குலார், அலகின் நுனி மெட்டையானது முதல் வட்டமானது அல்லது அரிதாக அதன் முனை சிறு_பிளவுடையது (ரெட்யூஸ் அல்லது இமார்ஜினேட்), அலகின் தளம் ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ் அல்லது சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-7 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் கூட்டமாக காணப்படுபவை, 4-6 மலர்களுடையது, பச்சை நிறமானது, 0.4 செ.மீ. குறுக்களவுடையது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), நீள்வட்ட வடிவானது, சதைப்பற்றானது, 1.7 செ.மீ. நீளமானது, கனியும் போது மஞ்சள் நிறமானவை, 2-அறைகளுடையது; விதைகள் 6-9, ஆரஞ்ச்-சிவப்பு நிறமான பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - அகஸ்த்தியமலை, ஆனைமலை, பழனி மலைகள் மற்றும் நீலகிரி, குறிப்பாக 1600-2000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Briq., Ann. Cons. Jard. Bot. Geneve 62. 1898; Gamble, Fl. Madras 1: 521. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 31. 2004.

Top of the Page