கேந்தியம் டைகாக்கம் (Gaertn.) Teys. & Binn. ரகம் அம்பல்லேட்டா (Wt.) Sant. & Merch. - ரூபியேசி

இணையான பெயர் : கேந்தியம் அம்பல்லெட்டம் Wt.; ப்ளக்ட்ரொனியா டைடிமா (Gaertn. f.) Kurz ரகம் அம்பல்லெட்டா (Wt.) Gamble; (ப்)சிட்ரக்ஸ் அம்பல்லெட்டா (Wt.) Bridson

Vernacular names : தமிழ்ப் பெயர்: நஞ்சுல், நல்லமாந்தரம்மலையாளப் பெயர்: நான்யால்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது, முதிரும் போது ஒழுங்கற்ற பிளவுகளுடையது மற்றும் பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை கீரிம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, கோட்டு வடிவானது அகன்ற தளம் உடையது, 0.9 செ.மீ. நீளமானது; இலைக்காம்பு 0.6-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 6-15 X 2.5-7 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 4-7 ஜோடிகள், டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் பிற நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சைம் வகை, இலைக்கோணங்களில் காணப்படுபவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்) முட்டை வடிவானது; மலர்காம்பு 1.5 செ.மீ. நீளமானது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகள் வரை காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Bull. Bot. Surv. India 3: 107. 1961; Gamble, Fl. Madras 2: 624. 1993 (re. ed); Bridson, Kew Bull. 48: 762. 1993; Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 233. 2004; Almeida, Fl. Maharashtra 3:55. 2001.

Top of the Page