கேனேரியம் ஸ்டிரிக்டம் Roxb. - பர்சிரேசி

:

தமிழ் பெயர் : கருங்குங்கிலியம், காரங்குந்திரிக்கம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம், தாங்கு வேர் (பட்ரஸ்டு) கொண்டது, 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மரத்தின் பட்டை ப்ரவுன் நிறம், லெண்டிசெல்லேட் கொண்டது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பொன் நிறமான அடர்ந்த பின்னிய உரோமங்களுடையது.
சாறு : பிசின் (ரெசின்ஸ்) சுரக்ககூடியது, அடர்ந்த ப்ரவுன் முதல் கறுப்பு நிறமானது, வெட்டிய இடத்திலிருந்து வெளிப்படும்.
இலைகள் : கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள் (இம்பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை சுழல் போன்று அமைந்தவை, கிளைகளின் நுனியில் கொத்தாக காணப்படும், 40 செ.மீ. நீளமுடையது; மையக்காம்பு (ரேக்கிஸ்) பொன் நிறமான உரோமங்களுடையது; சிற்றிலைகள் 3-9 ஜோடிகள் மற்றும் நுனியில் ஒரு சிற்றிலை மட்டும் இருக்கும், சிற்றிலைகள் தளத்தில் உள்ளதைவிட நுனியிலுள்ளவை பெரியவை; சிற்றிலைக்காம்பு 0.3-0.7 செ.மீ. நீளமானது; சிற்றிலையின் அலகு 5-15 X 2.5-7 செ.மீ., நீள்சதுரம், சிலவற்றில் முட்டை வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது முதல் வட்டமானது; சிற்றிலையின் விளிம்பு ரம்பபற்கள் முதல் மிகச்சிறிய ரம்பபற்களுடையது, கோரியேசியஸ், கீழ்பரப்பில் அடர்ந்த பின்னிய உரோமங்களுடையது, மேற்பரப்பில் உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் தடித்தவை 11-18 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் அமைந்த பேனிக்கிள், பொன் நிறமான அடர்ந்த உரோமங்களுடையது.
கனி / விதை : நீள்வட்ட உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 5 செ.மீ. நீளமுடையது. விதைகள் 1-3 வரை இருக்கும்.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 1600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் மியான்மார், மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி பகுதியில் காணப்படும்.

சான்று ஏடு :

Roxburgh, Fl. Ind. 3: 138.1832; Gamble, Fl. Madras 1: 172. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 86. 2004; Saldanha, Fl. Karnataka 2: 199. 1996. Cook, Fl. Bombay 1:202. 1902.

Top of the Page