English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது , வழுவழுப்பானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 9.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது; இலை அலகு 8-16 X 3.5-6 செ.மீ., முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது-ரம்ப பற்களுடையது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது தளத்திலே 3_நரம்புகளை உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 4 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய இணையான பெர்க்கரண்ட்.. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் இலைக்கோணங்களில் தொகுப்பாக காணப்படுபவை. |
| கனி / விதை : | சிற்றுலர்கனி (அக்கீன்). |