English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய மரம் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறம்; உள்பட்டை பிங்க் கலந்த கிரீம் நிறம். |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, இலை மற்றும் இலையடிச்செதில் விழுந்த வடு கொண்டது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு, கிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும், இலையடிச்செதில் பெரியது, 2.5 செ.மீ. வரை நீளமானது; ஈட்டி வடிவம், உதிரக்கூடியது; இலைக்காம்பு 2.5-4.5 செ.மீ., இலைக்காம்பின் இரண்டு நுனியிலும் உப்பியது; இலை அலகு 10-18 X 4.5-8.5 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் குறுகிய முட்டை வடிவம், அலகின் நுனி மழுங்கியதுடன் கூரியது அல்லது சிறிய அதிக்கூரியது மற்றும் மடிப்புகளுடையது, அலகின் தளம் வட்டமானது, கோரியேசியஸ், மேற்பரப்பில் பளபளப்பானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 11-20 ஜோடிகள், இணையானது; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமானது மற்றும் இணையான பெர்க்கரண்ட், மெலிதானது. |
| மஞ்சரி / மலர்கள் : | தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கில்டு ரெசீம்ஸ்; மலர்கள் சிறியது, வெண்மை நிறமுடையது. |
| கனி / விதை : | கேப்சூல், சிவப்பு நிறமுடையது, இரண்டு பகுதியுள்ள கேப்சூல், ஒவ்வொரு பகுதியிலும் ஓர் விதை கொண்டது. |