ப்பீல்ஸ்மியாடியா டால்ஜெல்லை (Meissn.) Kosterm. - லாரேசி

இணையான பெயர் : ப்பீல்ஸ்மியாடியா பாகிஃபோலியா ரகம் டால்ஜெல்லை Meissn.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; தண்டின் நுனியிலுள்ள மொட்டு சிறியது, உரோமங்களுடையது, தடித்த செதில்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிலசமயங்களில் கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றது. தண்டின் நுனியில் கூட்டமாக அமைந்தவை; இலைக்காம்பு 1-1.5 செ.மீ., நீளமானது, இலை அலகு 9.5-15 X 3.5-6 செ.மீ., நீள்வட்டம் முதல் முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் குட்டையான அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனையுடையது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது, மேற்பரப்பு பளபளப்பானது, கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், மெல்லியது, கொஞ்சம் கொஞ்சமாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் குட்டையான பேனிக்கிள் வகை மஞ்சரியில் காணப்படுபவை, இலைக்கோணங்களில் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1.7 செ.மீ. நீளமானது; கனியின் காம்பு தடித்தது, சிவப்பு நிறமானது; கனியில் ப்பீரியான்ந்த் உதிரக்கூடியது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - மத்திய சயாத்திரி மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளுக்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

DC., Prodr. 15 (1): 64. 1864; Gamble, Fl. Madras 2: 1221. 1993 (re. ed); Saldanha, Fl. Karnataka 1: 59. 1996.

Top of the Page