அட்டுனா ட்ராவன்கோரிக்கா (Bedd.) Kosterm. - க்ரைசோபலானேசி

இணையான பெயர் : ப்பாரினேரியம் ட்ராவன்கோரிக்கம் Bedd.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : நடுத்தர உயரமுடைய பசுமைமாறாமரம், 18 மீ. உயரமுடையது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் மற்றும் வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை; இலையடிச்செதில் கோட்டு வடிவானது, உரோமங்களுடையது, 1 செ.மீ. நீளமானது, எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.2-0.4 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.12 X 2.5-3 செ.மீ., ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது ஆப்பு வடிவம் போன்றது, கீழ்பரப்பு உரோமங்களற்றது, அலகின் பின்புறத்தில் மையநரம்பு மென்மையான உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் கிட்டதட்ட 15 ஜோடிகளுடையது, மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : ரெசீம் மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும், 5 செ.மீ. நீளமுடையது, மென்மையான நீண்ட உரோமங்களுடையது; மலர்கள் இளஞ்சிவப்பு (பிங்க்).
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1-2 விதையுடையது.

வாழியல்வு :

காணப்படும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலும் அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளிலும் மற்றும் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600-900 மீ. வரையான மலைகளிலுள்ளவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரியில் மட்டும் உள்ளவை

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

Reinwardtia 7: 423. 1969; Gamble, Fl. Madras 1: 437. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 167. 2004.

Top of the Page