English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | சிறியமரங்கள் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழவழப்பானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| சாறு : | |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது, தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 10-21.5 (34) x 4-7.5 (11.5) செ.மீ., நீள்வட்ட-தலைகீழ் முட்டை வடிவானது அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் அட்டனுவேட் முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது அலகின் நுனிப்பகுதி தெளிவற்ற பிறை போன்ற பற்களுடையது, உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு மெழுகுபூசியது (க்களாக்கஸ்) போன்றது, கோரியேசியஸ், ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-20 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது கண்களுக்கு புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் பிங்க் நிறமானது; மஞ்சரிக்காம்பு 12 செ.மீ. நீளமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 0.8 செ.மீ. குறுக்களவுடையது, சிவப்பு நிறமானது; ஒரு விதையுள்ள கனி. |