English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | சிறியமரங்கள் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் நிலத்திற்கு கிடைமட்டமானது; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக செதில்களுடையது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-0.7 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இளம்பருவத்தில் செதில்களுடையது; இலை அலகு 6-13 x 3.8-4 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 16-20 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, குறைந்தளவு மலர்களுடையது, சைம் வகை அல்லது அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் வெள்ளை நிறமானது. |
கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, சிவப்பு நிறமானது; ஒரு விதையுள்ள கனி. |