ஆர்டீசியா ப்ளட்டாரி Gamble - மிர்சினியெசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக செதில்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் செதில்களுடையது; இலை அலகு 5.5-11.4 x 3-5 செ.மீ., நீள்வட்ட-ஈட்டி வடிவானது முதல் நீள்வட்ட-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது-ரம்ப பற்களுடையது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, அலகின் கீழ்பரப்பு செதில்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 14 ஜோடிகள், தடித்தவை, அலகின் பரப்பைவிட பள்ளமானது, ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் அம்பல்லேட் சைம் வகை; மலர்கள் வெள்ளை நிறமானது முதல் பிங்க் நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, கருப்பு; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் 1500 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- வருசநாடு மலைகள் மற்றும் ஏலமலை (தெற்கு சயாத்திரி).

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Bull. Misc. Inform. Kew 1921: 121; Gamble, Fl. Madras 2: 755.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 264. 2004.

Top of the Page