English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உலரும் போது மஞ்சள் நிறமானவை. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.6-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-11 X 1.3-4 செ.மீ., குறுகிய நீள்வட்டம்-குறுகிய நீள்சதுர வடிவானது, அலகின் நுனியில் வால் போன்றது, அலகின் தளம் கூரியது முதல் சப்அட்டனுவேட், விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் மேற்பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், மெதுவாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் பச்சை கலந்த வெள்ளை நிறமானது, குட்டையான ஸ்பைக்; பெண்மலர்கள் கூட்டாக அமைந்தவை, காம்பற்றவை. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), கோளவடிவானது, கனியின் உட்சுவர் (எண்டோகார்ப்) சிவப்பானது; ஓர் விதையுடையது |