English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வெடிப்புகளுடையது; உள்பட்டை வெளிறிய மஞ்சள் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, தொங்கியவை, நன்கு கிளைத்தவை, உரோமங்களற்றவை. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் சிறியவை, 0.2 செ.மீ. நீளமானது, முட்டை-முக்கோண வடிவுடையது, கொஞ்சம் உரோமங்களுடையவை; இலைக்காம்பு 0.5-0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றவை; இலை அலகு 5-9 X 1.4-2.7 செ.மீ., குறுகிய நீள்வட்டம் வடிவானது, அலகின் நுனியில் நீண்ட மொட்டையான அதிக்கூரியது, அதன் முனை சிறிது துருத்தியது (மூயூக்கரனேட்), அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது அல்லது சிறிது சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், மையநரம்பு அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், விளிம்பில் ஒன்றொடொன்று இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் தண்டின் நுனியில் காணப்படும் ஸ்பைக்; மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சிவப்பு நிறமானது, முட்டை வடிவானது, சிறியது; ஓர் விதையுடையது. |