English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | சிறியமரங்கள், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலை அலகு 12-46 X 3.2-10 செ.மீ. நீண்ட நீள்வட்டம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் கூரியது மற்றும் டெக்கரண்ட், அலகின் விளிம்பு ரம்பபற்களுடையது, கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட சற்று உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள், மூன்றாம் நிலை நரம்புகள் சாய்ந்த பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் சிறிய ஸ்பைக், இலைக்கோணங்களில் காணப்படும்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் காணப்படும். |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), 3-அறைகளுடையது; 3 விதைகளையுடையது. |