அக்லையா லாவை (Wt.) Sald. - மீலியேசி

இணையான பெயர் : நிம்மோனியா லாவை Wt.; அக்லையா ஜைனை Viswa & Rama.; அக்லையா கேனரோனா (Turcz.) Hiern; அக்லையா தமிழ்நாடன்சிஸ் Nair & Rajan.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு வேர்கள் (பட்ரஸ்டு) கொண்டவை, 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மஞ்சள் கலந்த ப்ரவுன் நிறமான லெப்பிடோட் செதில்களுடையது.
சாறு : தண்டு வெட்டப்படும் போது குறைந்தளவு வெள்ளை நிறமான பால் போன்ற திரவத்தை சுரக்ககூடியது.
இலைகள் : கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தவை; மத்திய காம்பு (ராக்கிஸ்) 6-26 செ.மீ. நீளமானது, பல்வினேட், மஞ்சள் கலந்த ப்ரவுன் நிறமான லெப்பிடோட் செதில்களுடையவை; சிற்றிலைக்காம்பு 1 செ.மீ. நீளமுடையது; சிற்றிலைகள் 5-7, எதிரடுக்கமானவை அல்லது கிட்டதட்ட எதிரடுக்கமானவை அல்லது மாற்றுஅடுக்கமானவை, சிற்றிலையின் அலகு 12-18 X 5-6 செ.மீ.; நீள்சதுர முதல் நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு அலைப்போன்றது மற்றும் சிறிது பின்புறம் வளைந்தது (ரெவலுட்) காணப்படும், குறைந்தளவு லெப்பிடோட் செதில்கள் அலகின் அடிப்புறத்தில் உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகளுடையது, சிலசமயங்களில் அதன் கிளைக்குமிடத்தில் உரோமங்களுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட், சிலசமயங்களில் முதிர்ந்த இலைகளில் மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவைகள்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும், பேனிக்கிள், கூட்டிலையின் நீளத்தை விட குட்டையானது அல்லது சமமானது; மலர்கள் ஓர்பாலானவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), கோள வடிவம் போன்றது அல்லது தலைகீழ் முட்டை அல்லது பேரிக்காய் வடிவானது, சமமற்றது, 2.5 செ.மீ. நீளம், 2-3 அறைகளுடையது, வெள்ளை நிறமான ரெசினுடையது; விதைகள் அறைக்கு ஒன்றாக கொண்டது, பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அல்லது மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக உயரம் குறைவான அல்லது மிதமான உயரமுடைய மலைகளில் அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. வரை உயரமுடைய மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் பசுபிக் தீவுகள் வரை; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Saldanha & Nicolson, Fl. Hassan Dist. 392: 1976; Pannell, A taxonomic monograph of the Genus Aglaia Lour. (Meliaceae), 97. 1992; Gamble, Fl. Madras 1: 182. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 88. 2004; Saldanha, Fl. Karnataka 2: 230. 1996.